
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
கடைசியாக விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரிலீஸுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற உடன்பிறந்த தங்கை உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு பிரபல நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிட்டிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. தற்போது, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.