தகுதி இல்லாமல் படம் எடுக்க வந்த அஜித் பட இயக்குனர்.. இரட்டை வசூல் தந்த படம்

0
264

தன்னுள் இருக்கும் திறமையால் தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராய் வலம் வருபவர் தான் அஜித். இவரின் படங்களை இயக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முன் வரும் நிலையில், தகுதி இல்லாமல், இவரை வைத்து படம் இயக்க முயன்ற இயக்குனர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு விளம்பர படங்கள் மூலம் ஆரம்பித்து, சினிமாவில் சாதித்து தற்பொழுது டாப் ஹீரோவாக வலம் வரும் அஜித்தின் முதல் படம் வாலி. இப்படத்தின் இயக்குனரான எஸ் ஜே சூர்யா பாக்யராஜ் உடன் அப்பன்டிஸ் ஆக வேலை பார்த்தவர். அதன் பின் இயக்குனர் வசந்த் மற்றும் சபாபதி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

தன்னிடம் இருந்த சில அனுபவத்தைக் கொண்டு இயக்கத்தை மேற்கொண்ட இவர் அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். 1999ல் ரொமான்டிக் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் அஜித் இரட்டை வேடம் ஏற்று நடித்திருப்பார். ராமாயண காவியத்தின் உண்மை கதையை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருப்பார் எஸ் ஜே சூர்யா.

அந்த காலகட்டத்தில் இவருக்கு கதை மட்டுமே தெரிந்த நிலையில் படப்பிடிப்பை மேற்கொண்ட முதல் நாள் படப்பிடிப்பிலேயே பெருத்த அவமானத்தை சந்தித்துள்ளார். ஒரு இயக்குனருக்கு உரிய விஷயமான, ஷார்ட்டை கூட சரிவர எடுக்க தெரியாமல் மொக்கை வாங்கினாராம்.

இதைக் கண்டு கேலி செய்த பட குழுவினர்களிடம் பெருத்த அவமானத்திற்கு ஆளாகினாராம். மேலும் அஜித், இவரை மேற்கொண்டு எவ்வாறு இப்படத்தில் நடிப்பது என்று நிலைமையில் இருந்தாராம். அதைத்தொடர்ந்து அன்று இரவே ஹாலிவுட் படங்களை போட்டு பார்த்து எவ்வாறு ஷார்ட் வைத்திருக்கிறார்கள் மற்றும் இந்த ஆங்கிளில் செட் பண்ண வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு இயக்கத்தை தொடங்கினாராம்.

அதைத் தொடர்ந்து தன் விடாமுயற்சியால் இப்படத்தின் படப்பிடிப்பை 60 நாளிலேயே முடித்து விட்டாராம். அந்த அளவிற்கு இவர் மேற்கொண்ட இயக்கத்தில் வெளிவந்து மக்களிடையே பல விமர்சனங்களை பெற்றது. தம்பியின் மனைவியை அண்ணன் விரும்பியது போன்ற காட்சிகளை பெரும்பாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற நிலையில் இருந்த போது, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று சுமார் 270 நாட்கள் திரையில் ஓடி வெற்றியை பெற்று தந்தது.