ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ரெடியாகும் ஆப்பு.. களையெடுக்க காத்திருக்கும் கங்குலி அண்ட் கோ

0
278

இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆனது. கொஞ்சம் கூட ஒரு எதிர்ப்பு காட்டாமல், எங்களுக்கு இந்த கோப்பை வேண்டாம் என்பது போல் அவர்களது ஆட்டம் மிகவும் மெத்தனமாக இருந்தது இதன் எதிரொலியாக கங்குலி தலைமையிலான பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது.

ரகானே தவிர எந்த ஒரு வீரரும் சிறப்பாக செயல்படவில்லை. முக்கியமாக சீனியர் வீரர்களான விராத் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆட்டம் போதிய திருப்தி அளிக்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள பிசிசிஐ, சீனியர் வீரர்களை களையெடுக்க முடிவு செய்துள்ளது.

இந்த தோல்விக்கு காரணம் தேவையில்லாத வீரர்களை தேர்வு செய்தது என முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தலைசிறந்த வீரர் அஸ்வினை எடுக்காதது, பார்மில் இல்லாத பூஜாராவை எடுத்தது, பல கீப்பர்கள் இருக்கையில் தேவையில்லாத விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்துக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததும் இந்திய அணி தோல்விக்கு காரணமாக அமைந்தது

இப்பொழுது பிசிசிஐயின் கோபம் சீனியர் வீரர்கள் பக்கம் திரும்பி உள்ளது அதனால் இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக செயல்பட போகிறது. ஹர்திக் பாண்டியா மற்றும் இசான் கிசான் ஆகியோர்களை டெஸ்ட் அணிக்கு கொண்டு வருகிறது. சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா இனிமேல் தன் ஃபார்மை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு டெஸ்டில் வாய்ப்பு.

இப்பொழுது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஒரு இளம் படையை அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதை கேப்டனாக வழி நடத்த சீனியர் வீரரான ஷிக்கர் தவான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் தவான் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

இனி வரும் 20 ஓவர் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஆடுவது சிரமமே. அவர்களை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் வைத்துவிட்டு, புது 20 ஓவர் அணியை கட்டமைக்க இருக்கிறது பிசிசிஐ. அதனால் இனி ஒவ்வொரு ஃபார்மேட்க்கும் ஒவ்வொரு இந்திய அணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது