
சிஎஸ்கே அணி ரசிகர்களால் தல மற்றும் சின்னத் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் சகோதரி சாக்ஷிக்கு உத்தராகண்ட் மாநிலம், முசோரியில் இந்த வாரத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விளையாட்டுத் துறை மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த திருமண நிகழ்வில் தோனி, ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டனர். அப்போது திருமண அரங்கில் இசைக்கலைஞர்கள் உற்சாகமாக இசை இசைத்தபோது அவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தல மற்றும் சின்ன தல இணைந்து நடனமாடியது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.