சரண்டர் ஆன வெங்கட் பிரபு விஜய் வந்ததும் மாஸ் ஹீரோவை கழட்டிவிட்ட பரிதாபம்

0
377

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த நிலையில் விஜய் வைத்து எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த நேரத்தில் சற்றும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தளபதி 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவை நாடி வந்தது.

மேலும் பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில் விஜய் என்ற மிகப்பெரிய ஹீரோவின் பட வாய்ப்பு கிடைத்ததால் இரண்டு மாஸ் ஹீரோக்களை வெங்கட் பிரபு கழட்டி விட்டுள்ளார். இந்தச் செய்தி இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது தளபதி 68 பட அறிவிப்புக்கு முன்பே ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் விஜய்யின் கால்ஷீட் கிடைத்ததால் சிவகார்த்திகேயனை டீலில் விட்டுவிட்டார். இது சிலர் அறிந்த விஷயம் தான்.

ஆனால் மற்றொரு மாஸ் ஹீரோவையும் வெங்கட் பிரபு கழட்டி விட்டுள்ளார். அதாவது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு வெங்கட் பிரபு ஒரு படம் பண்ணுவதாக பேசி இருந்தார். இந்த படத்தில் கிச்சா சுதீப் தான் நடிப்பதாக இருந்தது. இவர் கன்னட மொழியில் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

மேலும் கிச்சா சுதீப் இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். நான் ஈ படத்தில் கூட வில்லனாக மிரட்டி இருப்பார். வெங்கட் பிரபு, சுதீப் கூட்டணி கிட்டதட்ட முடிவாகி அக்ரீமெண்ட் போடப்பட்டது. ஆனால் அந்தச் சமயத்தில் தான் தளபதி பட வாய்ப்பு வெங்கட் பிரபுவிடம் வந்து சேர்ந்தது.

ஆகையால் சத்யஜோதி பிலிம்ஸ் இடம் தளபதி பட வாய்ப்பு என்னால் நழுவ விட முடியாது. மேலும் இது என் கேரியரில் மிகவும் முக்கியமான படம். எனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் தளபதி படத்தை இயக்க வாய்ப்பு கொடுக்குமாறு வெங்கட் பிரபு மன்றாடி கேட்டுக்கொண்டார். அந்நிறுவனமும் தளபதி படத்தை இயக்குமாறு சொன்னதால் கிச்சா சுதீபை டீலில் விட்டார்.