
தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.இவர் விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்காக இவருக்கு விருதுகள் பல கிடைத்தன.

இப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. 2021 இல், நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்க ராய் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2022 இல், அவர் என். லிங்குசாமி இயக்கிய தி வாரியர் என்ற இருமொழித் திரைப்படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடித்தார்.

நாக சைதன்யா நடித்த வெங்கட் பிரபுவின் இருமொழி படமான கஸ்டடி மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். ராஜசேகர் ரெட்டி இயக்கிய தெலுங்குத் திரைப்படமான மச்செர்லா நியோஜகவர்கம் ஆகும்.2022 ஆம் ஆண்டு வரை, மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கிய ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாலியில் சுதீர் பாபுவுடன் இணைந்து நடித்தார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் LIC படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

தற்போது பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மேலும் நடிகர் கார்த்தியுடன் இணைந்து வா வாத்தியார் என்ற படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.

சோசியல் மீடியாவில் கீர்த்தி ஷெட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
