உயிரை விட துணிந்த சிம்பு பட நடிகை ராகுல் காந்தியால் அரசியலில் ஜொலிக்கும் ஹீரோயின்

0
241

பிரபலமான ஹீரோக்கள் அரசியலில் நுழைவது சாதாரண விஷயம் தான். ஆனால் நடிகைகள் அரசியலில் ஜொலிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதிலும் வாழ இஷ்டம் இல்லாமல் உயிரை விட துணிந்த சிம்பு பட நடிகைக்கு சரியான சமயத்தில் அறிவுரை கூறி இப்போது அவரை அரசியலின் முக்கிய அங்கமாக ஜொலிக்க வைத்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தவர் தான் திவ்யா ஸ்பந்தனா. இந்த படத்தில் ரம்யாவாக நடித்த திவ்யா, தன்னுடைய திரை பெயராக ரம்யா என்று வைத்துக் கொண்டார். முதலில் கன்னட நடிகையாகவே தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய ரம்யா தமிழில் குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ஆகாஷ் , கௌரம்மா மற்றும் அமிர்ததாரே போன்ற மூன்று கன்னடப் படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றார்.

தமிழிலும் தனுசுடன் பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை குத்து ரம்யா சினிமாவில் புகழ் பெற்ற போதே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்பி ஆகவும் மாறினார்.

பின்னர் உட்கட்சி பூசலினால் அந்த கட்சியை விட்டு வெளியே வந்தார். திடீரென இவரது வளர்ப்பு தந்தை இறந்துவிட இனிமேல் அவர் இல்லாத உலகத்தில் நான் இருக்க மாட்டேன் என தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த ராகுல் காந்தி அவரை சந்தித்து அவருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, அந்த எண்ணத்தில் இருந்து மாற்ற மிகப்பெரிய உதவி செய்தார்.

இதனால் அந்த அறிவுரையிலிருந்து தன்னை மாற்றிக் கொண்ட ரம்யா தற்போது புத்துணர்ச்சியோடு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இனிமேல் ராகுல் காந்திக்கு உண்மையாக அந்த கட்சியில் உழைப்பேன் என உறுதிமொழி எடுத்துள்ளார்.

தற்போது ரம்யா கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்காகவே உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் ரம்யாவிற்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக எம்பி சீட்டு உறுதியாகி உள்ளது என பிரபலங்கள் பேசி வருகின்றனர்.