
‘கிங்ஸ்டன்’ ரிலீஸுக்கு தயாராகும் நிலையில், நடிகை திவ்யபாரதி பகிர்ந்த சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
கோவையைச் சேர்ந்த திவ்யபாரதி மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த பின்னர் 2021-ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
‘மதில் மேல் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் திவ்யபாராதி.இதனிடையே, மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘கிங்ஸ்டன்’ படம் மார்ச் 7-ல் ரிலீஸாகிறது.

தொடர்ச்சியாக இணைந்து நடித்ததால் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியான நிலையில், அதை ஜி.வி.பிரகாஷ் – திவய்பாரதி இருவருமே திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்த வதந்தி குறித்து கூறும்போது, “எனக்கும் பலர் மெசேஜ் அனுப்புவார்கள். சில சமயங்களில் கஷ்டமாக இருக்கும்” என்றார்.
வதந்திகளை எல்லாம் கடந்து, கரியரில் கவனம் செலுத்தும் திவ்யபாரதி தனது சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்களை எங்ஜேகிங்காக வைத்துக் கொள்கிறார்.
