
சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம், நுணுக்கங்களை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அதன்படி ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் அவர்கள் தற்போது ஈடுபட தொடங்கியுள்ளனர். போலீஸார் இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாம் பகிரும் மொபைல் எண்கள் மூலமாக தனிநபர்களின் விவரங்களை திருடும் இந்த சைபர் மோசடிக் கும்பல் அதனை பயன்படுத்தி சமீபத்தில் பொருட்கள் வாங்கியதாகவும், அதற்கு பரிசு கிடைத்துள்ளதகாவும கூறி செய்திகளை அனுப்புகின்றனர். மொபைல் பயனாளர் அந்த லிங்கை தொட்டவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து உடனடியாக பணம் எடுக்கப்பட்டு விடுகிறது.
இதேபோல்தான், புதுடெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் குரோமாவிலிருந்து அண்மையில் எச்பி லேப்டாப் வாங்கியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து பரிசு வென்றதாக வவுச்சர் ஒன்று வந்துள்ளது. அதில் குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் என்ற இரண்டு பெயர்களும் இடம்பெற்றுள்ளதை கண்டு சந்தேகமடைந்த அவர் அந்த லிங்கை தொடாமல் மோசடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.