
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வெடிகுண்டு வைத்து கொல்லப்போவதாக நேற்று மிரட்டல் வந்தது.
இதுகுறித்து மும்பையில் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் இதன்மூலம் அவரை கொல்லப் போவதாகவும் மிரட்டல் வந்துள்ளது.
இது தொடர்பாக கோரேகான், ஜே.ஜே. மார்க் காவல் நிலையங்களுக்கும் மாநில அரசின் தலைமையகமான மந்திராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் காலையில் அழைப்புகள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.