Tuesday, April 22, 2025
Homeசெய்திகள்மலிவு விலையில் சாம்சங் மொபைல் அறிமுகம்.

மலிவு விலையில் சாம்சங் மொபைல் அறிமுகம்.

இந்தியாவில் மலிவு விலையில் 5G போன்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் Galaxy F06 மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy F06 மொபைலின் விலை:புதிய Galaxy F06 5G மொபைலானது 4GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.10,999 மற்றும் ரூ.11,999 ஆக உள்ளது. எனினும் நிறுவனம் சில சலுகைகளை வழங்கும் காரணத்தால் இந்த மொபைலை வாங்கும் போது விலை கணிசமாக குறையும். இந்த மொபைல் இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டில் பிப்ரவரி 20 (நாளை) முதல் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சேனல்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

புதிய கேலக்ஸி F06 மொபைலானது HD+ ரெசல்யூஷன் மற்றும் ஸ்டாண்டர்ட் 60Hz ரெஃப்ரஷ் ரேட்டிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 6.7-இன்ச் LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நிறுவனம் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான One UI 7.0 வெர்ஷனை வழங்குகிறது மற்றும் நான்கு OS அப்கிரேடுகள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளிக்கிறது.

இந்த மொபைல் MediaTek Dimensity 6300 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டு உள்ளது. மொபைலின் பின்புறம் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இந்த மொபைலில் 8MP கேமரா உள்ளது. இந்த மொபைலில் 25W வயர்டு சார்ஜிங் ஸ்பீட்டிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5000mAh பேட்டரியை உள்ளது மற்றும் மொபைலின் பக்கவாட்டில் உள்ள பவர் பட்டனே ஃபிங்கர் பிரின்ட் சென்சாராகவும் செயல்படுகிறது. மேலும் இந்த மொபைல் Samsung Knox Vault, Voice Focus மற்றும் Quick Share போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெறுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments