
அரிசோனாவில் இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான அரிசோனாவின் தெற்கில் உள்ள மரானா விமான நிலையத்திற்குற்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதியதில், ஒரு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், மற்றொரு விமான வெடித்து சிதறியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் வட அமெரிக்காவில் மட்டும் 4 விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அலஸ்காவில் வர்த்தக ஜெட்லைனரும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். அதேபோல, பிலடெல்பியாவில் ஒரு மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.