Saturday, April 19, 2025
Homeசெய்திகள்பிரபல பெண் எழுத்தாளர் தனது குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறியுள்ளார்.

பிரபல பெண் எழுத்தாளர் தனது குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறியுள்ளார்.

தனக்கு பிறந்துள்ள குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என்று பிரபல பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் கூறியுள்ளார்; ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு 3 முறை திருமணம் ஆகி, 11 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk), அமெரிக்கா ஜனாதிபது டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் முக்கிய பணியாற்றி வருகிறார். அவர், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும் மற்றும் 3வது மனைவியான ஷிவோன் ஷில்லிஸ்க்கு 3 குழந்தைகளும் உள்ளனர். முதல் 2 மனைவிகளை விட்டு பிரிந்து, தற்போது 3வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘5 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை. குழந்தையின் பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன்.

எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,’ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments