ஸ்கெட்ச் போட்டது லைக்காவுக்கு இல்லையா பதட்டத்தில் ரெட் ஜெயண்ட்யின் பெரிய தலைகள்

0
417

இன்று காலை முதல் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்றால் லைக்கா நிறுவனத்தில் அதிரடியாக அமலாக்கத்துறை சோதனை செய்வது தான். அதாவது மெகா பட்ஜெட் படங்களை இப்போது லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் தான் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் திடீர் இந்த சோதனைக்கான காரணம் பொன்னியின் செல்வன் படம் தான் என்று கூறப்பட்டது. அதாவது இந்த படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் அமலாக்க துறையினர் இது குறித்து சோதனை நடத்துவதாக செய்திகள் வந்தது. ஆனால் இந்த ஸ்கெட்ச் லைக்காவுக்கு இல்லை, உதயநிதிக்கு தான் என்பதை சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார்.

அதாவது உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மற்றும் லைக்கா இணைந்து ஆறு படங்களில் ஒன்றாக வேலை பார்த்துள்ளது. மேலும் சென்னை குற்றப்பிரிவு பதிவு செய்த 187/2022 வழக்கில் அமலாக்க பிரிவு சோதனையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. அதுவும் லைக்கா நிறுவனம் உதயநிதியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

அதேபோல் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு 8.5 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் லைக்கா நிறுவனம் பல படங்களை தயாரித்து வருவதால் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறதாம்.

இப்போது இந்தியன் 2 படத்தையும் லைக்கா உதயநிதியுடன் இணைந்து தான் தயாரித்து வருகிறது. மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஸ்டாலினின் பினாமி ராஜா சங்கர் தான் நடத்தி வருவதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார். இதனால் இப்போது உதயநிதி, ரவீந்திரநாத் போன்ற அரசியல் பெரிய தலைகள் இந்த வலையில் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த அமலாக்க சோதனையால் பல உண்மைகள் வெளியே வரும் என்று சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். மேலும் இந்தச் சோதனை கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினரையும் அதிர வைத்துள்ளது. மேலும் விரைவில் சோதனை செய்த அறிக்கையை அமலாக்க துறையினர் வெளியிட உள்ளனர்.