
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
இந்த ஆஸ்கர் விருது விழாவில் 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான ‘எமிலியா பெரெஸ்’ (EMILIA PEREZ) நாமினேட் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான் தான் (KARLA SOFIA GASCON) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தாண்டி ‘தி புரூட்டலிஸ்ட்’ (THE BRUTALIST) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த ‘அனுஜா’ என்ற குறும்படம் மட்டும் ‘சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)’ பிரிவில் தேர்வாகியிருந்தது.
சிறந்த இயக்குநர் – ஷான் பேகர் (‘அனோரா’), சிறந்த திரைப்படம் – அனோரா, சிறந்த நடிகர் – ஏட்ரியன் பிராடி (‘தி புரூட்டலிஸ்ட்’), சிறந்த நடிகை – மிக்கி மேடிசன் (‘அனோரா’), சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (‘எமிலியா பெரெஸ்’), சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ‘ஃப்ளோ’, சிறந்த தழுவல் திரைக்கதை: ‘கான்கிளேவ்’, சிறந்த அசல் திரைக்கதை: ‘அனோரா’, சிறந்த ஆடை வடிவமைப்பு: ‘விக்கெட்’, சிறந்த ஆவணப்படம்: ‘நோ அதர் லேண்ட்’, சிறந்த ஒளிப்பதிவு: ‘தி புரூட்டலிஸ்ட்’, சிறந்த ஆவணக் குறும்படம்: ‘ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா’, சிறந்த எடிட்டிங்: ‘அனோரா’, சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: ‘தி சப்ஸ்டன்ஸ்’, சிறந்த ஒரிஜினல் பாடல்: ‘எல் மால்’ (‘எமிலியா பெரெஸ்’), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ‘விக்கெட்’, சிறந்த அனிமேஷன் குறும்படம்: ‘இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்’, சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: ‘ஐ ஆம் நாட் ஏ ரோபோ’, சிறந்த ஒலி: ‘ட்யூன் 2’, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ‘ட்யூன் 2’, சிறந்த சர்வதேச திரைப்படம்: ‘ஐ ஆம் ஸ்டில் ஹியர்’, சிறந்த ஒரிஜினல் இசை: ‘தி புரூட்டலிஸ்ட்’