Monday, April 21, 2025
Homeசெய்திகள்அந்த நேரத்தில் மேலாடை இல்லாமல் 300 பேர் நடுவே ரிசார்ட்டில் ரகசியம் உடைத்த நடிகை சகீலா...

அந்த நேரத்தில் மேலாடை இல்லாமல் 300 பேர் நடுவே ரிசார்ட்டில் ரகசியம் உடைத்த நடிகை சகீலா ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகை சகீலா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். 

சினிமாவில் புதுமுகமாக இருந்த சமயத்தில் படப்பிடிப்பில் நீச்சல் உடையில் நடிக்க நேர்ந்தபோதும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வு தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சகிலா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“ஒரு ரிசார்ட்டில் படப்பிடிப்பு நடந்தது. அதில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற சில காட்சிகளை படமாக்கினார்கள். அந்த நீச்சல் குளத்தின் அருகே ஒரு சிறிய கிரவுண்ட் இருந்தது. 

அந்த கிரவுண்டில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 300 பேர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள். அந்த கிரவுண்டுக்கும் நீச்சல் குளத்திற்கும் இடையே ஒரே ஒரு சிறு வேலி மட்டுமே இருந்தது. அந்த வேலி செடிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. 

அங்கிருந்து நீச்சல் குளத்தை பார்த்தால் இங்கே என்ன நடக்கிறது என அனைத்துமே தெரியும். 

ஆனாலும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நீச்சல் குளத்தில் இருந்து ஊஞ்சல் குளத்தில் மூழ்கி நான் எழுந்திருக்க வேண்டும். அப்போது என்னுடைய உடை முழுவதுமாக கழன்று நீச்சல் குளத்திற்குள் விழுந்துவிட்டது. 

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனடியாக என் மார்பை கைகளால் மூடிக்கொண்டு என்னுடைய அறைக்குள் ஓடி விட்டேன். அங்கிருந்த 300 பேர் பார்த்தார்கள். 

அந்த சம்பவம் அப்போது எனக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தது,” என்று சகிலா கண்ணீர் மல்க அந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை விவரித்தார்.

சகிலா சினிமாவில் ஆரம்ப காலத்தில் சந்தித்த இன்னல்கள் மற்றும் அவமானங்கள் குறித்து பலமுறை பேசியிருக்கிறார். ஆனால், இந்த நீச்சல் குள சம்பவம் அவரை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. 

திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் சவால்களையும், ஆரம்ப கால கஷ்டங்களையும் சகிலாவின் இந்த பேட்டி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments