Friday, April 4, 2025
Homeசெய்திகள்எம்புரான் திரை விமர்சனம்.

எம்புரான் திரை விமர்சனம்.

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளிவர, படம் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.

முதலில் லூசிப்பர் என்ன கதை, எப்படி இரண்டாம் பாகத்துடன் இந்த எம்புரான் இணைகிறது என்பதை பார்ப்போம். கேரளா முதல்வர் இறப்பிற்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி மிகப்பெரிய போதை கும்பலை கொண்டு வர விவேக் ஓபுராய் முயற்சிக்கிறார்.

இதை அறிந்து களத்தில் இறங்கி ஸ்டிபன் நெடும்பள்ளி இதற்கு முற்றுபுள்ளி வைத்து ஆட்சியை இறந்த முதல்வர் மகனான டொவினோ தாமாஸிடம் ஒப்படைக்கிறார் மோகன் லால், இதோடு லூசிபர் முடிகிறது.

இப்போதும் எம்புரான், சரி டொவினோ மோகன்லால் விரும்பிய நல்லாட்சியை தந்தாரா என்றால், அங்கு தான் டுவிஸ்ட் ஊழலில் மூழ்கி உள்ளது இந்த கட்சி. அதோடு தான் செய்யும் தவறுகளை மறைக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி, தனியாக கட்சி அதோடு சர்வதேச போதை கும்பல் வருகை என அனைத்தும் ஒன்று கூடுகிறது.

இதை அறிந்த மோகன்லால் பிறகு என்ன மீண்டும் ஸ்டிபன் நெடும்பள்ளி Entry, இந்த கூட்டத்தின் ஆட்டத்தை எப்படி அடக்குகிறார் என்பதே மீதிக்கதை. மோகன்லால் அவரின் பில்டப் மாஸ் காட்சிகளை நம்பியே படம் தொடங்கியிருப்பார்கள் ஆனால், கதைக்களம் வேறு எங்கோ ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து தான் மோகன்லால் பில்டப் காட்சிகளுக்கே வருகிறது.

அது ஒரு சராசரி மோகன்லால் ரசிகர்களின் பொறுமையை கண்டிப்பாக அது சோதிக்கும். ஆனால் முதல் 20 நிமிட காட்சி பிரித்விராஜ் எடுத்த மற்றும் காட்டிய விதம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது, அந்த சம்பவங்களின் மூலம் பிரித்விராஜ் யார் என்பதை கிளைமேக்ஸில் சொன்ன விதம் சூப்பர்.

நடிகர்களின் பங்களிப்பு குறித்து பார்த்தால் மோகன்லால் பெரிதும் நடிக்கும் பாத்திரம் இல்லை, மிடுக்காக வருகிறார், சண்டை செய்கிறார் அவ்வளவே. ஆனால், மஞ்சு வாரியருக்கு இதில் சிறப்பான பாத்திரம், அதிலும் இரண்டாம் பாதியில் ப்ளான் போட்டு கைதாகி மக்கள் மனதை வெல்லும் காட்சியில் கலக்கியுள்ளார்.

லூசிபர் லோக்கல் பாலிட்டிக்ஸ் கதை என்பதால் எல்லோருக்கும் ஏற்றது போல் இருந்தது, ஆனால், இதில் கே.ஜி.எப் போல் இண்டர்நேஷனல், ட்ரக் கார்டல், மாபியா என கதைக்களம் எங்கங்கோ செல்வது திரைக்கதையில் ஒட்டாமலேயே படம் பல இடங்களில் செல்கிறது.

இப்படி பல சோதனைகள் இருந்தாலும் மோகன்லால் இரண்டாம் பாதியில் மஞ்சு வாரியரை காப்பாற்றும் இடம், 3ம் பாகத்திற்கான லீட் என ஒரு சில விஷயங்களே ரசிக்க வைக்கின்றது. டெக்னிக்கலாம் படம் மிக வலுவாகவே உள்ளது, அதிலும் ஒளிப்பதிவு டாப், இசையும் கலக்கல். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments