
விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் 2 நேற்று மாலை வெளியானது. டிஜிட்டல் உரிமம் தொடர்பான பிரச்சனையின் காரணமாக நேற்று காலை படம் வெளியாகவில்லை. இதனால் டிக்கெட் ப்ரீ புக்கிங் செய்தவர்களுக்கு பணம் திரும்பக் கொடுக்கப்படும் என பல தியேட்டர்கள் அறிவித்தது. அதை அடுத்து டிக்கெட் கவுண்டரில் வாங்கியவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது.
மேலும் படம் நான்கு வாரங்கள் கழித்து ரிலீஸ் ஆகும் என்று கூட செய்திகள் பரவியது. இப்படி ஏகப்பட்ட அலப்பறைகளுக்கு நடுவில் வீர தீர சூரன் ஒரு வழியாக மாலை ரிலீஸ் ஆனது. இதற்காக தியேட்டர் வாசலில் காத்திருந்த சீயான் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து விட்டனர். அதேபோல் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களும் படத்தை காண தியேட்டருக்கு வந்தனர்.
சில தியேட்டர்களில் இரண்டு காட்சிகளும் அதிக ஸ்கிரீன்கள் கொண்ட தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளும் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது வசூலும் லாபகரமாக இருக்கிறது. அந்த வகையில் வீர தீர சூரன் தமிழ்நாட்டில் மட்டுமே 2 கோடியே 5 லட்சம் வசூல் செய்திருக்கிறது. அதிலும் சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் தான் அதிக வசூல் குவிந்துள்ளது.
அது மட்டும் இன்றி இந்திய அளவில் இப்படம் 3.2 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. இந்த வசூல் இன்று இரு மடங்காக அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அந்த அளவுக்கு படம் வொர்த் என்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் முரட்டு சம்பவம் செய்திருக்கிறார் என்றும் ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.
மேலும் வார இறுதி நாட்களில் ரசிகர்களின் வரவு அதிகமாக இருக்கும். இதனால் வசூல் எதிர்பார்த்ததை விட லாபமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.