
மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா இந்த குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கு மட்டுமே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
ஆனால் 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தில் அயர்ன் மேன் உயிரிழந்து விட்டதாலும் மற்றும் கேப்டன் அமெரிக்கா வெளியேறியதாலும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் களையிழந்து காணப்படுகிறது. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ப்பைஜின் சமீபத்திய பேட்டியின் அது விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘டெட்பூல் 4’ பாகம் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டெட்பூல் & வால்வரின்’ வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான (டெட்பூல் 4) பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
