
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் குடும்பத்துடன் மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் வீடு அருகே நேற்று சொகுசு கார் மீது மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த பஸ் மோதியது. இதில், காரின் பின்பகுதி லேசான பாதிப்பு அடைந்தது.
ஆனால், விபத்துக்குள்ளான சமயத்தில் அந்த காரில் நடிகை ஐஸ்வர்யா ராய் பயணிக்கவில்லை. டிரைவர் மட்டுமே காரில் சென்றுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.