Saturday, April 5, 2025
Homeசெய்திகள்மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங் நிறுத்தம்… கரணம் நயன்தாராவா?

மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங் நிறுத்தம்… கரணம் நயன்தாராவா?

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாகத்தான் இருக்கிறது இந்த சம்பவம். நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அதை அடுத்து பார்ட் 2 சுந்தர் சி இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் பட பூஜையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெகு பிரம்மாண்டமாக நடத்தினார்.

அந்த பூஜையில் பங்கேற்ற நயன்தாரா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக காட்டினார். அதற்கு காரணம் மற்ற நடிகைகளுக்கும் அதே அளவு கவனிப்பு இருந்தது தான்.இப்படி பூஜையிலேயே ஒரு பிரச்சனையை தொடங்கினார் நயன். அதை அடுத்து படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. அங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது உடை விஷயத்தில் நயன்தாராவுக்கும் உதவி இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்திருக்கிறது. உடனே கோபப்பட்ட நயன் உதவி இயக்குனரை கண்டபடி திட்டி இருக்கிறார்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை கேள்விப்பட்ட சுந்தர் சி கோபமாக படப்பிடிப்பை நிறுத்தி இருக்கிறார். அதன் பிறகு தயாரிப்பாளர் தலையிட்டு சமரசம் செய்தாராம்.

இப்படி ஒரு தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் நயன்தாராவின் இமேஜ் சரிந்துள்ளது. ஏற்கனவே அவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி இருக்கிறது.சமீபகாலமாக அவர் காட்டும் ஆட்டிட்யூட் ஓவராக தான் இருக்கிறது. அதுவே அவருடைய பெயரை கெடுக்கும் விதமாக இருக்கிறது. அதில் தற்போது படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட முறையும் சர்ச்சையாக மாறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments