Wednesday, April 9, 2025
Homeசெய்திகள்வீரதீரசூரனுடன் மோதும் எம்புரான்.

வீரதீரசூரனுடன் மோதும் எம்புரான்.

ஒரு வழியா பல போராட்டங்களுக்குப் பிறகு மார்ச் 27ஆம் தேதி விக்ரமிற்கு வீரதீரசூரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார் சியான். ஏற்கனவே திறமையான பல இயக்குனர்களை நம்பி களத்தில் இறங்கியும் அவர் பாதாளத்தில் தான் இருக்கிறார்.

தங்கலான், கோப்ரா, மகான் போன்ற படங்கள் இவரை காலை வாரி விட்டது. இவ்வளத்துக்கும் பா ரஞ்சித், அஜய் ஞானமுத்து என பல வெற்றி இயக்குனர்கள் தான் இந்த படத்தை இயக்கியுள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து அனைத்து படங்களும் விக்ரமுக்கு தோல்வியாகவே அமைந்து வருகிறது.

இப்பொழுது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வீரதீரசூரன் படம் ட்ரைலர், டீசர் என அனைத்தும் ஏகபோக வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரமும் தன் பங்கிற்கு நடிப்பில் மிரட்டியுள்ளார். சேதுபதி, சித்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்த அருண்குமார் இந்த படத்தை இயக்குனர்.

இப்பொழுது இந்த படத்திற்கு போட்டியாக எம்புரான் படம் வெளிவருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் கூட்டணியில் இந்த படமும் 27ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது. இதை தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர். இது ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம்.

எம்புரான் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக செண்பகமூர்த்தி ரிலீஸ் செய்கிறார். இதனால் வீர தீர சூரன் மற்றும் எம்புரான் இரண்டிற்கும் தியேட்டர் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் இரண்டிற்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments