
தவறை உணர்ந்தேன் என சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உட்பட 25 பேர் மீது தெலுங்கானா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், பிரகாஷ்ராஜ் கொடுத்துள்ள விளக்கத்தில், 2016இல் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாகவும், தவறை உணர்ந்த பிறகு அதன் ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை என்றும், அதன் பிறகு அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2021இல் வேறொரு நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கி மீண்டும் எனது வீடியோக்களுடன் விளம்பரம் செய்தனர் என்றும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன், அது தவறு என்று நான் சொன்னதும் அவர்கள் நிறுத்திவிட்டார்கள் என்றும் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்தார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் கூற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் வீடியோ வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.