Monday, April 21, 2025
Homeசெய்திகள்குட் பேட் அக்லி அப்டேட்டுகளால் அதிரும் இணையம்.. Ferrari மியூசியத்தில் கூலாக அஜித்குமார்.

குட் பேட் அக்லி அப்டேட்டுகளால் அதிரும் இணையம்.. Ferrari மியூசியத்தில் கூலாக அஜித்குமார்.

நடிகர் அஜித்குமார் தற்போது தனது கார் ரேஸில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். இவரது அஜித் குமார் கார் ரேஸ் அணி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை 24 மணி நேரம் நடைபெறவுள்ள கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இவரது அணி இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணித்து வருகிறது.

தற்போது இவரது அணி இத்தாலியில் உள்ளது, இந்நிலையில் இத்தாலியில் உள்ள உலகப் புகழ் பெற்ற, கார் நிறுவனமான Ferrari நிறுவனத்தின் அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார் அஜித்குமார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரது அணி இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பது,போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் தொடர்ந்து அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.

அஜித் குமார் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு கார் ரேஸில் கவனம் செலுத்த திட்டமிட்டதால், அவர் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தனது அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு, கார் ரேஸில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். கார் ரேஸ் மூலம் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் அஜித் குமார் மற்றும் அவரது அஜித் குமார் கார் ரேஸ் அணி பெருமை தேடிக் கொடுத்துக் கொண்டுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் பாடல் இன்று அதாவது மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ஓ.ஜி. சம்பவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளார்கள்.இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் பாடலை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பல ஆண்டுகளாக அஜித்துக்கு இதுபோன்ற பாடலுக்கு காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த பாடல் விருந்தாக அமைந்துள்ளது.

இப்படியான நிலையில் அஜித் குமார் மற்றும் அவரது அஜித் குமார் ரேஸிங் அணியைச் சேர்ந்தவர்கள் இத்தாலியில் உள்ளார்கள். இப்போது அஜித் தனது ரேசிங் அணியினர் உடன் சேர்ந்து, இத்தாலியில் உள்ள Ferrari மியூசியத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அஜித் அங்கு உலா வரும் வீடியோக்களும் டிவிட்டர் பக்கத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

இன்று வெளியான ஓ.ஜி சம்பவம் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளில் ” துப்பாக்கி, பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தை ஆளா சம்பவம்டா” என்ற வரிகள் உள்ளன. இந்த வரிகள் விஜய்யை அட்டாக் செய்து எழுதப்பட்டுள்ளது என பரவலாக பேசப்பட்டு வருகிறது, காரணம், விஜய் நடிப்பில் துப்பாக்கி என்கிற படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் அஜித்தின் சினிமா போட்டியாளர் என்றால் அது விஜய் தான். அதனால்தான் விஜய்யை அட்டாக் செய்து பாடல் வரிகளை எழுதி உள்ளார்கள் என கூறப்படுகிறது. எனவே பாடலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments