
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் திரைப்படம் இந்த மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில், பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்கிற ட்ரோல்கள் குவிந்தன.
இந்நிலையில். ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிக்கந்தர் பக்கம் திருப்பும் அளவுக்கு பிரம்மாஸ்திரமாக ‘சிக்கந்தர் நாச்சே’ பாடல் நேற்று வெளியானது. அதில் ராஷ்மிகா மந்தனா காட்டிய தாராள கவர்ச்சி இளைஞர் கூட்டத்தை மொத்தமாக கவர்ந்து டிரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளார்.
தான் இன்னமும் நேஷனல் கிரஷ் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் அளவுக்கு சிக்கந்தர் பாடலில் பப்ளியாக ராஷ்மிகா மந்தனா நடனமாடி இருப்பது சல்மான் கான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சிக்கந்தர் படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், அந்த பாடல் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வந்தன. ராஷ்மிகா மந்தனா வெறும் ரேம்ப்வாக் மட்டுமே செய்தார் என்றும் சல்மான் கான் ஹெவியான ஸ்டெப்ஸ் போட்டு நடனம் ஆடாத நிலையில், ரஷ்மிகா மந்தனாவையும் ஆட வைக்கவில்லை என்று கலாய்த்தனர். இந்நிலையில் நேற்று சிக்கந்தர் நாச்செ எனும் செகண்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

புஷ்பா 2 படத்தில் பீலிங்ஸ் பாடலுக்கு காட்டுத்தனமாக நடமாடி கிஸிக் எனும் ஐட்டம் பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாடியதையே மறக்க வைக்க செய்தார் ராஷ்மிகா மந்தனா. சிக்கந்தர் படத்தில் அப்படி அவரை பயன்படுத்தவில்லையே என ஏங்கி தவித்த ரசிகர்களுக்கு இந்த பாடலில் அதிகம் ஆடவில்லை என்றாலும் கவர்ச்சியை தாராளமாக காட்டி கிறங்கடித்துள்ளார்.
நேற்று வெளியான இந்த பாடல் 20 மணி நேரத்தில் 20 மில்லியன் வியூஸ் அள்ளி இந்திய அளவில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. அஜித்குமாரின் குட் பேட் அக்லி ஓஜி சம்பவம் பாடல் இதுவரை 7 மில்லியன் பார்வைகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஓவர் நைட்டில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சியால் சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் இந்த ரம்ஜானுக்கு வெளியாக உள்ள நிலையில், பாலிவுட்டின் அடுத்த ஆயிரம் கோடி ரூபாய் படமாக மாறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்கள் குறைந்தபட்சம் 500 கோடிக்கு மேல் தான் வசூல் செய்து வரும் நிலையில், சிக்கந்தர் திரைப்படம் சல்மான் கானுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமாக மாறும் என்கின்றனர். இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடித்த சாவ்வா திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.