Wednesday, April 9, 2025
Homeசெய்திகள்பெருசு படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்.

பெருசு படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், விடிவி கணேஷ், கருணாகரன், முனீஸ்காந்த், தீபா சங்கர் சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெருசு. இந்த படம் நேற்று அதாவது மார்ச் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் எப்படி உள்ளது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” வைபவ் மற்றும் சுனில் அண்ணன் தம்பியாக வருகிறார்கள். அவர்களுக்கு வயதான அப்பா இருக்கிறார். அந்த அப்பா ஒரு நாள், இறந்துவிடுகிறார். வயதானவர் இறந்தால் மிகவும் கொண்டாட்டமாக அவரது இறுதிச் சடங்குகள் நடப்பது வழக்கம். ஆனால் அவர்களால் அப்படி பிரமாண்டமாக இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத அளவுக்கு, அவரது அப்பா பப்பி ஷேமாக இறந்து விடுகிறார். இதை ஊருக்குள் சொல்ல முடியாது என்பதால் என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள்.

எப்படியும் அடக்கம் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் அதற்குள் விஷயம் ஊருக்குள் தெரிந்துவிட்டதால், ஒவ்வொருவராக வருகிறார்கள். இந்த பப்பி ஷேமை மறைத்தார்களா? அப்பாவை அடக்கம் செய்தார்களா என்பதுதான் கதை. இந்த படம் கெண்டிகோ என சிங்களத்தில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக். இது ஒரு அடல்ட் காமெடி படம். அடல்ட் காமெடி படம் எல்லாம் எடுக்கலாமா? இது சமுதாயத்தை சீரழிக்காதா என பூமர் தனமாக பேசுவது எல்லாம் அர்த்தம் இல்லை. மற்ற படங்களைப் போல் இதுவும் ஒரு வகை. அந்த வகையில் அடல்ட் காமெடி வகையில் முயற்சி செய்துள்ளார்கள். இதுதான் இந்த பெருசு படம்.

ஒரு சின்ன புள்ளியில் தொடங்கும் கதையை முழுநீள கதையாக மாற்றியது சிறப்பான விஷயம் தான். அதை எப்படி எடுத்துள்ளார்கள் என பார்த்தால், படத்தின் தொடக்கமே குழப்பமான விஷயம் தான். இதை ஆரம்பத்திலேயே முடித்திருக்கலாம். ஆனால் ஒரு முழு படமாக எடுக்க, கதையில் அந்த அளவிற்கு அடர்த்தி இல்லை. ஒரு ஷார்ட் பிலிம்க்கான கதையைத்தான் படமாக எடுத்துள்ளார்கள். அதனால் படம் ஜவ்வு மிட்டாய் மாதிரி போய்க்கொண்டு உள்ளது.

இது அடல்ட் காமெடி படம் என்பதால், பல இடங்களில் படக்குழு டார்க் காமெடி வைத்துள்ளது. அது சில இடங்களில் ஒர்க்-அவுட் ஆனது, பல இடங்களில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. படத்தில் பல கதாபாத்திரங்கள் வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வரும்போது, கதை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் இல்லையா? ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் வரும்போது, கதை அங்கேதான் உள்ளது. இந்த படம் எல்லோருக்குமான படம் கிடையாது. இது அடல்ட் படம் பார்க்க கூடிய குறிப்பிட்ட ஆடியன்ஸ்க்கான படம்தான்.

சென்சாரை மனதில் நினைத்து படம் எடுத்துள்ளார்கள். அதனால் பெரிய குபீர் சிரிப்பு வரும் அளவிற்கு படம் இல்லை. காட்சிகளாகவும் வைக்கவில்லை. அதற்கான கதையும் இது இல்லை. டார்க் காமெடி காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். ஆனால், அது சில இடங்களில் ஒர்க் -அவுட் ஆகவில்லை. ஒரு சின்ன புள்ளியில் ஆரம்பித்து கதையை இவ்வளவு பெரிய படமாக எடுத்துள்ளதைப் பார்க்கும்போது, பாராட்டலாம். ஆனால் படமாக இது சுமாரான படம்தான்” என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments