Friday, April 18, 2025
Homeசெய்திகள்நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்தாரா மீனா?

நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்தாரா மீனா?

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார். அது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதால் அவரது ட்ரீட்மெண்ட்டில் படம் கண்டிப்பாக வேறு மாதிரி இருக்கும் என்றும்; நிச்சயம் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்றும் நயனின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நயன்தாரா. சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தவர். முக்கியமாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து கடுமையாக தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானார். அதிலும் பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததால் நயன் மீதான மற்றவர்களின் விமர்சனம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் பாதியில் முடிந்ததைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அப்போது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார். இந்தக் காதலிலும் அவரை ஒருதரப்பினர் தொடர்ந்து விமர்சித்தார்கள். ஏனெனில் நயனைவிடவும் விக்கிக்கு வயது குறைவு. ஆனால் அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

திருமணத்துக்கு பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். அது முதலில் சர்ச்சை ஆனது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கட்டடத்தை விக்கி விலை பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. மேலும் தனுஷுடன் நடிகை நயனுக்கு மோதல் ஏற்பட அந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் வழக்காக இருக்கிறது. சரி இத்தோடு நிற்கும் என்று பார்த்தால் நயன் கொடுத்த ஒரு பேட்டியில் பத்திரிகையாளர்கள் மூன்று பேரை தரக்குறைவாக பேசினார். மேலும் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தாமதமாக சென்று மக்களை காக்க வைத்துவிட்டார் என்று கடந்த சில காலமாகவே நயனை சுற்றி சர்ச்சை சர்ச்சை சர்ச்சைதான்.

இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தாலும் நயன் தனது நடிப்பில் பிஸியாக இருக்கிறார். ராக்காயி, மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர்; சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார். இதன் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்தின் பூஜை சமீபத்திதான் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நயன் மட்டுமின்றி குஷ்பூ, மீனா, சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் புதிய பஞ்சாயத்து ஒன்று ஆரம்பித்திருக்கிறது. அதாவது மூக்குத்தி அம்மன் 2 பூஜையில் மீனாவிடம் நயன்தாரா முகம் கொடுத்தே பேசவில்லை; மீனா நயனிடம் எவ்வளவோ பேச முயற்சித்தார் ஆனால் நயனோ கடமைக்கு பேசியது போல்தான் தெரிந்தது என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வர ஆரம்பித்தது. இதனைப் பார்த்த பலரும் நயன் ஓவர் ஆட்டிட்யூட் காண்பிக்கிறார் என்று கூறினார்கள்.

அதுமட்டுமின்றி நயனைவிடவும் புகழின் உச்சியில் இருந்தவர் மீனா. அவரை இப்படி அவமதித்திருக்கக்கூடாது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்திருந்தார். அதில் ஒன்றில், தன்னை பற்றி ஆடுகள் என்ன சொல்கிறது நினைக்கிறது என சிங்கம் கவலைப்படாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் இன்னொரு ஸ்டோரியில், ‘நல்ல மனது இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும். அது எல்லோருக்கும் இருக்காது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நயனுக்குத்தான் மீனா மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments