
இந்தியாவின் முதல் ‘ஏஐ’ திரைப்படமாக உருவாகியுள்ள ‘NAISHA’ பாலிவுட் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமா அதன் எல்லைகளை நாளுக்கு நாள் விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. பிலிம் ரீல்களில் தொடங்கி டிஜிட்டலாக மாறி, திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் ஓடிடிக்களுக்குள் நுழைந்து வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது உலகையே ஆட்கொண்டு வரும் ‘ஏஐ’ டெக்னாலஜியை திரைத்துறை பயன்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘NAISHA’ பாலிவுட் படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை விவேக் அன்சாரியா இயக்கியுள்ளார்.
நய்ஷா போஸ், ஜெயின் கபூர் ஆகியோரின் முக பாவனைகளில் அடிப்படையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் உணர்த்துகிறது. இந்தப் படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.