
கடந்த வருடம் எத்தனையோ சர்ச்சைகள் நடந்தது. ஆனால் ரவி மோகன் தன் மனைவியை பிரிய போகிறேன் என அறிவித்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதை அடுத்து இரு தரப்பின் மேல் பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்தது. அதிலும் ரவி தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
அதையடுத்து தற்போது தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு புது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார். இந்த வருட தொடக்கத்திலேயே அவரின் காதலிக்க நேரமில்லை வெளிவந்தது. பெரிய அளவில் வரவேற்பு பெறாவிட்டாலும் அடுத்ததாக வரப்போகும் பராசக்தி அவரை கை தூக்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார்.
இதற்கு அடுத்ததாக அவர் நடிக்கும் கராத்தே பாபு படமும் அரசியல் சம்பந்தப்பட்ட கதை. இப்படி படத்திற்கு படம் வெரைட்டி காட்டும் ரவி மோகன் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.ஏற்கனவே சிம்பு, தனுஷ் என ஹீரோக்கள் இயக்குனராகியுள்ளனர். அதன்படி ரவி இயக்கப் போகும் படம் இந்த வருட இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
முழுக்க முழுக்க காமெடி அலப்பறையாக உருவாக போகும் இப்படத்தின் ஹீரோ யோகி பாபு. ஏற்கனவே இது பற்றி அரசல் புரசலாக செய்திகள் வந்தது.தற்போது அது உறுதியாகி இருக்கிறது. ரவி இப்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு விரைவில் இயக்குனராகும் வேலைகளை தொடங்க இருக்கிறார்.