Tuesday, April 22, 2025
Homeசெய்திகள்வட சென்னை 2 ஹீரோ தனுஷ் இல்லையா?

வட சென்னை 2 ஹீரோ தனுஷ் இல்லையா?

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த வடசென்னை நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து பார்ட் 2 எப்போது வரும் என ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.

தனுஷ் கூட ஒரு மேடையில் வெற்றிமாறன் சரின்னு சொன்னா ஆரம்பிச்சுடலாம் என சொன்னார். அதேபோல் வெற்றி மாறனும் சீக்கிரம் அறிவிப்பு வரும் என கூறினார்.

ஆனால் இப்போது பார்த்தால் வடசென்னை 2 ஹீரோ தனுஷ் கிடையாது என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. ஏனென்றால் தற்போது அவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது.

அதுபோக டைரக்ஷன் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் வெற்றிமாறன் விடுதலை இரண்டு பாகங்களை முடித்துவிட்டு வாடிவாசல் பக்கம் சென்று விட்டார்.

ஆனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் வட சென்னை 2 அப்டேட்டை எதிர்பார்த்து வருகின்றனர். அதனால் வெற்றிமாறன் தன் உதவியாளரை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம்.

அவரே தயாரிக்கும் இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. குடும்பஸ்தன் படம் மூலம் அவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது.

மினிமம் பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் அவரை சுற்றி வளைத்து வருகின்றனர். இப்படி ட்ரெண்டிங் ஹீரோவாக மாறி இருக்கும் அவர் வட சென்னை 2 ஹீரோ என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

நிச்சயம் இது வதந்தியாக தான் இருக்க வேண்டும். இது சம்பவமாக இருக்காது ஆப்பு தான் என பல்வேறு கமெண்ட்டுகள் பரவிக் கொண்டிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments