Tuesday, April 22, 2025
Homeசெய்திகள்திருமண மோதிரத்தை எப்படி உருமாற்றியுள்ளார் நடிகை சமந்தா.

திருமண மோதிரத்தை எப்படி உருமாற்றியுள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா, திரையுலகில் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல், தனது சொந்த உழைப்பாலும் திறமையாலும் முன்னேறியவர். 

மாடலிங் துறையில் வெறும் 500 ரூபாய் சம்பளத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும், பிறருக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளராகவும் உயர்ந்து சாதனை படைத்துள்ளார். 

சினிமாவில் நடிகையாக அறிமுகமான உடனேயே, சமந்தா தனது தொழில் முனைவோர் பயணத்தையும் தொடங்கினார். அவர் ஆரம்பித்த “Saaki” ஆடை வணிகம் இன்று வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

இந்த வணிகம், சமந்தாவின் தொழில் திறமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. திரைப்படங்களில் கொடிகட்டி பறக்கும் சமந்தாவின் சொந்த வாழ்க்கையில் ஒரு கசப்பான நிகழ்வு நடந்தது. 

அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது அந்த உறவு. இது சமந்தாவுக்கு ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது திருமண உடைக்கு கருப்பு நிறம் ஏற்றி, அதை மீண்டும் ஒரு புதிய ஆடையாக அணிந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார் சமந்தா. 

அந்த துயரமான காலத்தை கடந்து வரும் வலிமையை அந்த செயல் மூலம் வெளிப்படுத்தினார். தற்போது, சமந்தா தனது வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். 

விவாகரத்துக்கு பிறகு, ரூபாய் 48 லட்சம் மதிப்புள்ள தனது நிச்சயதார்த்த மோதிரத்தை அவர் தற்போது ஒரு அழகிய பெண்டன்டாக மாற்றி இருக்கிறார். இந்த செயல், கடந்த கால நினைவுகளை சுமந்து கொண்டு வருங்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க அவர் எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. 

மோதிரத்தை பெண்டன்டாக மாற்றியது என்பது, சமந்தா பழைய நினைவுகளை விட்டுவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்க தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments