
2023 ஜவான் படத்திற்கு பிறகு அட்லி எந்த படத்தையும் இயக்கவில்லை. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சன் டிவியையே பதற வைத்துள்ளார் அட்லீ. இவர் இயக்கப் போகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கவிருந்தது.
புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை விட பெரும் தொகையை கேட்டு வருகிறார். அந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 300 கோடிகள். கிட்டத்தட்ட அதே சம்பளத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கும் கேட்டுள்ளார்.
ஏற்கனவே அல்லு அர்ஜுன் கேட்ட பெரும் தொகையால் ஆடிப்போயிருந்த சன் பிக்சர்ஸ்க்கு மேலும் இடியாய் அட்லீயும் ஒரு பெருந்தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். ஜவான் படம் இயக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் சன் பிக்சர்ஸ் உடன் அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு சம்பளமாக 55 கோடிகள் பேசியுள்ளனர்.
ஜவான் படத்தின் ஆயிரம் கோடி வசூலுக்கு பின் அட்லி கேட்கும் சம்பளமோ 100 கோடிகள். அல்லு அர்ஜுன் சம்பளம், அட்லி சம்பளம் என இந்த படத்திற்கு ஆயிரம் கோடிகள் வேண்டும் என்று இப்பொழுது சன் டிவி பின் வாங்கி விட்டது. இதனால் அல்லு அர்ஜுன் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு இதை சிபாரிசு செய்துள்ளார்.
அல்லு அர்ஜுன், இந்த படத்திற்கு முன் திரிவிக்ரம் படத்தில் நடிப்பதாக கமிட் செய்திருந்தார். ஆனால் இப்பொழுது அதை ஒதுக்கி விட்டு அட்லியுடன் கமிட்டாகி விட்டார். இதனால் தயாரிப்பாளர் தில்ராஜை இந்த படத்திற்கு சிபாரிசு செய்துள்ளார். இப்பொழுது அட்லி, அல்லு அர்ஜுன், தில்ராஜ் கூட்டணி ரெடியாகிக் கொண்டிருக்கிறது.