
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தில் மற்றொரு புதிய நட்சத்திரம் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் தான். ஆம், மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என தகவல் கூறுகின்றனர்.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பசில் ஜோசப் தமிழில் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போகிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளார் என்கின்றனர்.