
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தனது திரையுலக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சந்தோஷமான தருணங்களை அனுபவித்து வருகிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் தெறி திரைப்படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் தனது கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ரசிகர்களும் அவரது திருமண வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் இரண்டையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக தான் செல்லும் ஒரு புதிய இடம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்! இலங்கைக்கு சென்றிருக்கும் கீர்த்தி சுரேஷ், அங்கு ஒரு கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை சென்றடைந்த கீர்த்தி சுரேஷ், அங்கிருந்து சில புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இலங்கை மண்ணில் கீர்த்தி சுரேஷை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்று வருகின்றனர். இந்த புகைப்படங்களில் அவரது புன்னகையும், கனிவான பார்வையையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் இந்த இலங்கை பயணம், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திரைப்பட புரொமோஷன் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கு இடையே, கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும், அவரது இலங்கை கடை திறப்பு விழா நிகழ்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
