
பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி தன்னுடைய மீடியா பயணத்தை செய்தி வாசிப்பாளராக தொடங்கினார். ரசிகர்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவருக்கு அதுவே ஒரு பெரிய மைனஸ் பாயிண்டாகவும் அமைந்துவிட்டது என்று அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.
பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி தன்னுடைய மீடியா பயணத்தை செய்தி வாசிப்பாளராக தொடங்கினார். ரசிகர்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவருக்கு அதுவே ஒரு பெரிய மைனஸ் பாயிண்டாகவும் அமைந்துவிட்டது என்று அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.
செய்தி வாசிப்பாளர் என்ற ஒரு தோற்றமே எனக்கு நிறைய பட வாய்ப்புகளை வரவிடாமல் செய்திருக்கிறது. நான் நன்றாக தமிழில் பேசுகிறேன் என்ற காரணத்திற்காக எல்லாம் என்னை படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.
அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது. அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் வழுக்கை தலையுடன் இருக்கக்கூடிய ஒரு நபரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது
இதை கேட்டு ஷாக்கான திவ்யா துரைசாமி என்னங்க இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க..? என்று அதிர்ந்து போனார்.
தொடர்ந்து அதற்கு பதிலளிக்க ஆரம்பித்தார் திவ்யா துரைசாமி. அவர் கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை ஒருவருக்கு பணம், மனம், அழகு அவர் வழுக்கை தலையாக இருக்கிறார்,, அதெல்லாம் பிரச்சினையே கிடையாது.
ஒருவரை பார்த்தவுடன் அவர் மீது நமக்கு ஒரு அபிப்ராயம் வரும். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று சொல்வார்களே ஒருவரை பார்க்கும் போது அவர்களைப் பற்றி நமக்கு என்ன தோன்றுகிறதோ அதனை நான் நம்பக்கூடியவள்.
அப்படி நான் யாரை பார்க்கும் போது அவர் என்னை ஈர்க்கிறாரோ அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக அது பற்றி நான் யோசிப்பேன்.
மற்றபடி அவரிடம் குறிப்பிட்ட தகுதி இருக்க வேண்டும்.. உயரமாக இருக்க வேண்டும்.. நல்ல வசதி இருக்க வேண்டும்.. நல்ல மனது இருக்க வேண்டும்.. இதெல்லாம் இரண்டாவது பட்சம்.பார்த்தவுடன் ஒருவரை எனக்கு பிடிக்கிறதா..? என்பதுதான் இங்கே விஷயம்.. அது இருந்தால் போதும் என்று பேசி இருக்கிறார். நடிகை திவ்யா துரைசாமி.