Wednesday, April 9, 2025
Homeசெய்திகள்வடசென்னை 2 குறித்து வெற்றிமாறன் கூறிய பதில்.

வடசென்னை 2 குறித்து வெற்றிமாறன் கூறிய பதில்.

வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் நிலையில் தனுசுடன் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதில் குறிப்பாக பலரது கவனத்தைப் பெற்ற படம் தான் வடசென்னை. இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக எடுக்கப்பட்டிருந்தது.

இதில் தனுசை காட்டிலும் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் தான் அதிக கவனம் பெற்றது. இந்த படத்தின் இறுதியில் அன்பின் எழுச்சி என வடசென்னை 2 படத்திற்கான லீடை வெற்றிமாறன் கொடுத்திருந்தார்.

இதனால் எப்போது அந்த படம் உருவாகும் என ரசிகர்கள் பலமுறை வெற்றிமாறன் இடம் கேட்டு வருகின்றனர். முன்பெல்லாம் இதற்கு வாய்ப்பில்லை என்று கூறி வந்த வெற்றிமாறன் விடுதலை 2 வெற்றிக்கு பிறகு வடசென்னை படம் வரும் என்று கூறி வருகிறார்.

சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை பற்றி கூறியிருந்தார். அதாவது எப்போது இந்த படம் தொடங்கும் என்ற ஆர்வம் அதிகமாக மக்களிடத்தில் இருக்கிறது.

ஆனால் வடசென்னை 2 படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இந்த ஆர்வம் இருக்காது. மேலும் கண்டிப்பாக வடசென்னை 2 படம் வரும் அதற்கான வேலைகள் மிக விரைவில் தொடங்கும் என்று வெற்றிமாறன் அந்த விழா மேடையில் கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இப்போது சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் வடசென்னை 2 வேலைகள் தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments