Monday, April 7, 2025
Homeசெய்திகள்சென்டிமென்டால் சர்தார் 2-க்கு சிக்கல் ஏற்படுமா?

சென்டிமென்டால் சர்தார் 2-க்கு சிக்கல் ஏற்படுமா?

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்போது சர்தார் 2 படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்ட போது அவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இப்போது சர்தார் 2 படத்திற்கான டப்பிங் வேளையில் கார்த்தி இறங்கி உள்ளார். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சர்தார் 2 படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இதற்கு ஒரு செண்டிமெண்ட் ஆன காரணமும் இருக்கிறதாம்.

ஏனென்றால் 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் தான் சர்தார் படம் வெளியாகி இருந்தது. அப்போது இந்த படம் மாபெரும் வரவேற்பு பெற்று வசூலையும் அள்ளிக் கொடுத்தது. அதை மனதில் வைத்து இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஆனால் தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அந்த படங்களோடு கார்த்தி போட்டியிடும்போது சர்தார் 2 படத்தின் வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலும் முதல் பாகத்தை விட மூன்று மடங்கு பட்ஜெட் அதிகமாக இந்த படத்தை எடுத்துள்ளனர்.

ஆகையால் ஒரு நல்ல லாபத்தை கொடுத்தால் தான் படம் வெற்றி அடைய செய்ய முடியும். எனவே செண்டிமெண்டை நம்பி கார்த்தி தவறான முடிவு எடுத்துள்ளாரா என்று பலரும் கூறி வருகின்றனர். ஒருவேளை இதுவும் கார்த்திக்கு வொர்க் அவுட் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments