
நயன்தாராவின் மார்க்கெட் இப்போது டல்லாக இருக்கிறது. அவர் கைவசம் கணிசமான படங்கள் இருந்தாலும் கூட முன்பு இருந்த கெத்து அவரிடம் இல்லை.இதற்கு முக்கிய காரணம் தனுஷை அவர் பகைத்துக் கொண்டதுதான். அப்போது ஆரம்பித்த சர்ச்சை இப்போதும் கூட அடுத்தடுத்த விஷயங்களின் மூலம் தொடர்ந்து வருகிறது.
அதேபோல் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவர் தூக்கி எறிந்தது கூட கலாய்க்கப்பட்டது. இப்படி சர்ச்சை ராணியாக இருக்கும் அவர் தற்போது நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளார்.
அதாவது ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு நிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் இருந்தார். ஆனால் இப்போது டாப் 6 நடிகைகளில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆறாவது இடத்தில் இருக்கும் பூஜா ஹெக்டே 8 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். ஐந்தாவது இடத்தில் சமந்தா 10 கோடியும் நான்காவது இடத்தில் திரிஷா 12 கோடியும் வாங்குகின்றனர்.
மேலும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராஷ்மிகா 13 கோடி சம்பளம் பெறுகிறார். அதை அடுத்து 15 கோடி சம்பளம் வாங்கும் நயன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இவரை ஓரங்கட்டி 20 கோடி சம்பளம் வாங்கி முதலிடத்தை தட்டி பிடித்துள்ளார் சாய் பல்லவி. கடந்த வருடம் வரை இவருடைய சம்பளம் 5 கோடியாக தான் இருந்தது.
ஆனால் அமரன் படத்தின் மாபெரும் வெற்றி இவரை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி தற்போது அவர் ராமாயணம் படத்தில் சீதா கேரக்டரில் நடிக்கிறார்.
அதற்காக இவர்கள் 20 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் எந்த அலட்டலும் இல்லாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் சாய்பல்லவி.