
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரேயா. தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் தமிழிலும் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். தொடர்ந்து தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து நட்சித்திரமாக ஜொலித்தார்.ரஜினி, விஜய், விக்ரம் என தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
சினிமாவில் செம உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் கொடுத்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் றெஸ்ட் எடுத்துக்கொண்ட இவர், தற்போது மீண்டும் செம ஆக்ட்டிவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
