
தற்போது திரிஷா பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என்றும், திரிஷாவை விட 4 வயது இளையவர் என்றும் கூறப்படுகிறது.
திருமணமே வேண்டாம் என்று முன்பு கூறிய திரிஷா தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை விட இளையவரை திருமணம் செய்து கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது உண்மையா அல்லது வழக்கம்போல வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.