
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். இதற்கு முன்பே சமையல் கலை படித்துவிட்டு விஐபி வீட்டு விசேஷங்களில் தனது குழுவுடன் சேர்ந்து சமைத்து வருகிறார்.
பெரிய பிரபலங்கள் பலரும் இவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றனர். சமீபத்தில் ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்த செய்தி பல ஊடகங்களில் வெளியானது.
இதைத்தொடர்ந்து ரங்கராஜின் மனைவி ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் அவரின் மனைவி நான் தான் என்று பதிவிட்டிருந்தார். மேலும் ஜாய் கிரிஸில் என்பவரை ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது.
அதோடு இந்த விவகாரம் இன்னும் சூடு பிடிக்க காரணம் ஜாய் தனது பெயருடன் ரங்கராஜ் பேரையும் இணைத்து வைத்திருந்தார். சமீபத்தில் இதுகுறித்து நேரடியாக மாதம்பட்டி ரங்கராஜ் இடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதைப் பற்றி அவசியமாக பேச வேண்டும் என்ற நிலைமை இருந்தால் விபரமாக சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு நேரடியாக ஆமாம், இல்லை என்று சொல்லாமல் மழுப்பலாக மாதம்பட்டி ரங்கராஜ் பேசியிருப்பது மேலும் பிரச்சனையை சூடுபிடிக்க செய்துள்ளது. இது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.