
உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக வாட்ஸ் அப் உள்ளது. இந்தியாவிலும் வாட்ஸ் அப் பயனாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதே வேளையில் பயனாளர்கள் கணக்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் மெட்டா இறங்கி உள்ளது. சைபர் க்ரைம் மோசடிகளை தடுக்க அவ்வப்போது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மெட்டா, தற்போது 84 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கி இருக்கிறது.
இது குறித்து மெட்டா கூறி இருப்பதாவது: விதிகளை பின்பற்றாமல் தவறான நோக்கங்களுக்கு இந்த கணக்குகளை பயன்படுத்தி உள்ளனர். அந்த வகையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை 84 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. 16.6 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.
16 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் எவ்வித புகார்களும் தரப்படாமல் முடக்கப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக மெசேஜ்களை (Bulk messages) அனுப்புவது, விதிகளை மீறி சட்ட விரோதமாக, தவறாக செயல்பட்டதால் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு மெட்டா கூறி உள்ளது