
சாம்சங் தொழிற்சாலையில் மேலும் 13 தொழிலாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பை பராமரிக்க தமிழக அரசின் உதவியை நிர்வாகம் கோரியுள்ளது.
சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் தொடர்பான விவகாரத்தில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஊழியர்கள் 16-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். மேலும் 13 தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், உற்பத்தியை தடுக்க முயன்றதாக மேலும் 13 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து இன்று முதல் சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில், காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் பந்தல் அமைத்து சாம்சங் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.