
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் மீண்டும் சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது.ஆனால், அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையை கடந்துள்ளது.
நேற்று (பிப்.20) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64,560க்கும், கிராமுக்கு ரூ.8,070க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (பிப்.21) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,840க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,605க்கும் விற்பனை செய்யப்படுகிறது.