
குஜராத்தில் பஸ்சும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பஸ்சும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.