
இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
தமிழில் 1 முதல் 7 வது சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார், பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலக சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார்.
சமீபத்தில் தான் முடிந்த இந்த 8வது சீசனில் முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் மறு ஒளிபரப்பாகும் என்ற செய்தி ப்ரோமோவுடன் வெளியானது. ஹாட்ஸ்டார் ஜிவ் சினிமாவுடன் இணைந்து ஜிவ் ஹாட்ஸ்டார் என்று மாறியதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் வரவிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் இனிமேல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.