Saturday, April 5, 2025
Homeசெய்திகள்இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று ஆரம்பம்.

இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று ஆரம்பம்.

சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் 8-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

தொடக்க நாளான நேற்று கிரண் ராவ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “லபதா லேடீஸ்” திரைப்படம் திரையிடப்பட்டது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத் தவிர, டங்கல், ஜிந்தகி நா மிலேகி தோபரா”, “ மிமி”, “ இங்கிலிஷ் விங்கிலிஷ், “ 777 சார்லி” உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களும் இந்திய திரைப்பட விழாவில் அடு்த்தடுத்து திரையிடப்பட உள்ளன.

இந்தியாவின் பன்முகத்தன்மை, வளமான பழமையான பாரம்பரியம், சமகால சவால்கள் மற்றும் படைப்புத் திறமையை உலகளவில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக இந்த திரைப்பட விழா அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments