
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16e மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.பட்ஜெட் விலையில் ஐபோன் SE4 மாடல் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருப்பதாகத் தகவல் பரவியது. ஆனால், அதற்கு மாற்றாக A18 பிராசசர், iOS 18 கொண்ட ஐபோன் 16e மாடல் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் களம் இறக்கியுள்ளது.
சாட் ஜிபிடி, சிரி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த போன், வயர்லஸ் சார்ஜிங் வசதியோடு Type-C போர்ட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Super Retina XDR OLED கொண்ட 6 புள்ளி 1 இன்ச் திரை, IP68 ரேட்டிங், 48 MP ரியர் கேமரா, 12 MP செல்ஃபி கேமரா கொண்ட இந்த போன், கருப்பு மற்றும் வெள்ளை நிற மேட் பினிஷ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப விலை 128 GB வேரியண்ட் 59 ஆயிரத்து 900 ரூபாய் எனவும், 512 GB கொண்ட டாப் என்ட் மாடல் 89 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி ப்ரீபுக்கிங் தொடங்கும் என அறிவித்துள்ள ஆப்பிள், பிப்ரவரி 28 முதல் டெலிவரி தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.