
பூமியை தாக்குவதற்கு விண்கல் ஒன்று தயாராகி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மனிதன் வாழ்வதற்கான ஆக்சிஜன், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.
மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருந்தாலும் அவ்வப்போது சில விண்கற்கள் அச்சுறுத்தல் ஏற்படும்.
விண்கற்கள் வளிமண்டலத்திற்குள் வரும் போது அவை பெரும்பாலான நேரம் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்கள் மட்டுமே பூமியை தாக்கும் அபாயம் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியை தாக்க கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பூமியை தாக்குவதற்கு 3.1 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நாசா கூறியுள்ளது. முன்பு இந்த தாக்குவதற்கான வாய்ப்பு 2.6 சதவீதமாக கடந்த வாரம் இருந்தது. அது தற்போது 3.1 ஆக இந்த வாரம் உயர்ந்துள்ளது என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்த கூடும் என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள்.
இந்தக் கல் 2032 டிசம்பர் 22ஆம் தேதி தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விண்கல்லுடைய நகர்வை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கண்காணித்து வருகிறது.பெரும்பாலும் இந்த கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு குறைய கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.