
திருப்பதிக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று திருமலைக்கு சென்றார்.
அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர், அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோன்று, திருச்சானூர் பத்மாவதி தாயாரையும் பட்னாவிஸ் நேற்று தரிசித்தார். அவருக்கு அதிகாரிகள் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கிகவுரவித்தனர்.